Advertisement
Advertisement
Advertisement

ஐஎல்டி20 2024: அபுதாபி நைட் ரைடர்ஸை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ்!

அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan January 23, 2024 • 22:56 PM
ஐஎல்டி20 2024:  அபுதாபி நைட் ரைடர்ஸை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ்!
ஐஎல்டி20 2024: அபுதாபி நைட் ரைடர்ஸை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ்! (Image Source: Google)
Advertisement

இன்டர்நேஷனல் லீக் டி20 என அழைக்கப்படும் ஐஎல்டி20 தொடரின் இரண்டாவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 6ஆவது லீக் ஆட்டத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அபுதாபியிலுள்ள ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற எமிரேட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து களமிறங்கிய அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்கு அலிஷான் ஷரபு - ஆண்ட்ரீஸ் கொஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் அலிஷான் ஷரபு 3 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய மைக்கேல் கைல் 5 ரன்களிலும், சாம் ஹைன் ரன்கள் ஏதுமின்றியும், ஆண்ட்ரீஸ் கொஸ் 10 ரன்களுக்கும் என அடுத்தடுத்து டிரெண்ட் போல்ட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். 

Trending


இதையடுத்து களமிறங்கிய லௌரி எவான்ஸ், இமாத் வசிம் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுபக்கம் களமிறங்கிய ஆண்ட்ரே ரஸல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் ரவி போபாரா, டேவிட் வில்லி, சுனில் நரைன் என களமிறங்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

அதன்பின் அணியின் நம்பிக்கையாக விளையாடி வந்த ஆண்ட்ரே ரஸல் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 3 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 48 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனால் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி 14.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்களில் ஆல் அவுட்டானது. மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் தரப்பில் அபாரமாக பந்துவீசிய டிரெண்ட் போல்ட், முகமது ரோஹித் கான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய எமிரேட்ஸ் அணிக்கு முகமது வசீம் - குசால் பெரேரா இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்து அடித்தளம் அமைத்ததோடு முதல் விக்கெட்டிற்கு 42 ரன்களையும் பார்ட்னர்ஷிப்பும் அமைந்தனர். அதன்பின் 2 பவுண்டரி, 2 சிக்சர்கள் என 22 ரன்கள் எடுத்த நிலையில் குசால் பெரேரா ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். 

அதன்பின் வசீமுடன் இணைந்த கேப்டன் நிக்கோலஸ் பூரானும் அதிரடியாக விளையாடி பந்துவீச்சாளர்களை திணற வைத்தார். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த முகமது வசீம் 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 26 ரன்களையும், நிக்கோலஸ் பூரன் ஒரு பவுண்டரி, 5 சிக்சர்கள் என 39 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 8.1 ஓவர்களில் இலக்கை எட்டியதுடன் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது. மேலும் இப்போட்டியின் வெற்றிக்கு வித்திட்ட டிரெண்ட் போல்ட் ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement