Advertisement

ஐஎல்டி20 2024 குவாலிஃபையர்: கல்ஃப் ஜெயண்ட்ஸ் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது எமிரேட்ஸ்!

கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கெதிரான ஐஎல்டி20 குவாலிஃபையர் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan February 15, 2024 • 11:32 AM
ஐஎல்டி20 2024 குவாலிஃபையர்: கல்ஃப் ஜெயண்ட்ஸ் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது எமிரேட்ஸ்!
ஐஎல்டி20 2024 குவாலிஃபையர்: கல்ஃப் ஜெயண்ட்ஸ் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது எமிரேட்ஸ்! (Image Source: Google)
Advertisement

ஐஎல்டி20 என்றழைக்கப்படும் இன்டர்நேஷனல் லீக் டி20 தொடரின் இரண்டாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இத்தொடரின் முதல் குவாலிஃபையர் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் புள்ளிப்பட்டியளின் முதலிரண்டு இடங்கைப் பிடித்த முமபை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் மற்றும் கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

இதையடுத்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணிக்கு முகமது வசீம் - குசால் பெரேரா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் முகமது வசீம் 12 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய ஆண்ட்ரெ ஃபிளெட்சர் ரன்கள் ஏதுமின்றி ஆட்டமிழந்தார். அதன்பின் மற்றொரு தொடக்க வீரரான குசால் பெரேராவும் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க மும்பை அணி 46 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 

Trending


அதனைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் நிக்கோலஸ் பூரன் - டுவைன் பிராவோ இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய நிக்கோலஸ் பூரன் ஒரு பவுண்டரி, 3 சிக்சர்கள் என 36 ரன்களிலும், டுவைன் பிராவோ 2 பவுண்டரி, ஒரு சிக்சர் என 30 ரன்கள் சேர்த்த நிலையிலும் என ஆட்டமிழந்தனர். 

பின்னர் இறுதியில் ஜோடி சேர்ந்த டிம் டேவிட் - கீரென் பொல்லார்ட் இணை அதிரடியாக விளையாடியதுடன் பவுண்டரிகளாக விளாசி அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்தனர். இதில் டிம் டேவிட் 29 ரன்களில் ஆட்டமிழக்க, அதேசமயம் இறுதிவரை களத்தில் இருந்த கீரென் பொல்லார்ட் 3 பவுண்டரி, ஒரு சிக்சர் என 27 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அணியின் தொடக்க வீரர்கள் ஜேம்ஸ் வின்ஸ், ஜோர்டன் காக்ஸ் ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய கிறிஸ் லின் 18 ரன்களுக்கும், உஸ்மான் கான் 26 ரன்களுக்கும், ஜேமி ஸ்மித் 10 ரன்களுக்கும் என தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தனர்.

பின்னர் அணியின் நம்பிக்கையாக பார்க்கப்பட்ட ஷிம்ரான் ஹெட்மையர், ஜேமி ஓவர்டன், லியாம் டௌசன் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கி அதிரடி காட்டிய கிறிஸ் ஜோர்டன் 2 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 31 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தார். ஆனால் மற்ற வீரர்கள் சோபிக்க தவற கல்ஃப் ஜெயண்ட்ஸ் அணி 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 118 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 

மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய விஜயகாந்த் வியாஸ்காந்த் 3 விக்கெட்டுகளையும், அகீல் ஹொசைன், வக்கர் சலாம்கெயில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதன்மூலம் மும்பை இந்தியன்ஸ் எமிரேட்ஸ் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் கல்ஃப் ஜெயண்ட்ஸை வீழ்த்தியதுடன், ஐஎல்டி20 தொடரின் இறுதிப்போட்டிக்கும் முதல் அணியாக முன்னேறி அசத்தியுள்ளது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement