
ILT20: Clarke Scores Fifty As Abu Dhabi Knight Riders Clinch Their First Win Of The Season (Image Source: Google)
ஐஎல்டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 28ஆவது லீக் ஆட்டத்தில் ஷார்ஜா வாரியர்ஸ் - அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற அபுதாபி நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஷார்ஜா வாரியர்ஸ் அணியில் மாலன் 7 ரன்களிலும், லூயிஸ் 23, மொயீன் அலி 9, ஸ்டொய்னிஸ் 6 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழக்க, மறுமுனையில் அரைசதம் மடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கொஹ்லர் காட்மோர் 46 ரன்களில் ஆட்டமிழந்து அரசதமடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
பின்னர் களமிறங்கிய வீரர்களும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்காதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 130 ரன்களை மட்டுமே சேர்ந்தது. நைட் ரைடர்ஸ் அணி தரப்பில் மதியுல்லா கான் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.