
‘I’m Sure he Will do Well’: Sunil Gavaskar Wishes Dinesh Karthik (Image Source: Google)
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்டன் நகரில் வருகிற 18ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடக்கிறது.
இப்போட்டியை இங்கிலாந்து தொலைக்காட்சி நிறுவனமான ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் வர்ணனையாளராக தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தேர்வாகி உள்ளார். அவர் முதல் முறையாக வர்ணனையாளராக அறிமுகமாகிறார்.
அதன்படி இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கருடன் இணைந்து தினேஷ் கார்த்திக் வர்ணனை செய்யவுள்ளார்.