Advertisement

துலீப் கோப்பை 2024: இந்தியா ஏ vs இந்தியா பி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் முதல் லீக் போட்டியில் இந்தியா ஏ மற்றும் இந்தியா பி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement
 துலீப் கோப்பை 2024: இந்தியா ஏ vs இந்தியா பி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
துலீப் கோப்பை 2024: இந்தியா ஏ vs இந்தியா பி - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 04, 2024 • 07:06 PM

IN-A vs IN-B, Match 1, Duleep Trophy 2024, Dream11 Prediction: இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் ஒன்று துலீப் கோப்பை கிரிக்கெட் தொடர். இத்தொடரின் நடப்பாண்டு சீசானது நாளை முதல் தொடங்கவுள்ளது. மொத்தம் நான்கு அணிகள் விளையாடும் இத்தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் அனைவரும் பங்கேற்கொன்றனர். அந்தவகையில் நாளை நடைபெறும் முதல் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான இந்தியா ஏ மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலான இந்தியா பி அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்கள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
September 04, 2024 • 07:06 PM

IN-A vs IN-B: Match Details

  • மோதும் அணிகள் - இந்தியா ஏ vs இந்தியா பி
  • இடம் - எம் சின்னசாமி மைதானம், பெங்களூரு
  • நேரம் - காலை 9.30 மணி

IN-A vs IN-B: Live Streaming Details

Trending

நடப்பாண்டு துலீப் கோப்பை தொடரின் அனைத்து போட்டிகளையும் ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் இத்தொடரை இலவசமாக கண்டுகளிக்கலாம். 

IN-A vs IN-B: Pitch Report

பெங்களூருவில் அமைந்துள்ள எம் சின்னசாமி கிரிக்கெட் மைதானமானது பேட்டர்களுக்கு சாதமான மைதானங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. மேலும் இங்கு பவுண்டரி எல்லைகள் குறைவு என்பதால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இமாலய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தளவில் முதல் நாள் பேட்டர்களுக்கு சாதகமாக இருந்தாலும், அடுத்தடுத்த நாள்களில் பந்துவீச்சாளர்களும் இங்கு ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

India A vs India B: Possible XIs

இந்தியா ஏ: மயங்க் அகர்வால், ஷுப்மான் கில் (கே), கேஎல் ராகுல், திலக் வர்மா, ரியான் பராக், ஷிவம் துபே, துருவ் ஜூரல், குல்தீப் யாதவ், ஆகாஷ் தீப், அவேஷ் கான், கலீல் அகமது

இந்தியா பி: யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிமன்யு ஈஸ்வரன் (கே), ரிஷப் பந்த், முஷீர் கான், சர்ஃப்ராஸ் கான், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, சாய் கிஷோர், யாஷ் தயாள், முகேஷ் குமார்.

IN-A vs IN-B: Dream11 Team

  • விக்கெட் கீப்பர்கள்: கேஎல் ராகுல்
  • பேட்டர்ஸ்: ஷுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, அபிமன்யு ஈஸ்வரன், சர்பராஸ் கான்
  • ஆல்ரவுண்டர்கள்: வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் (கேப்டன்), ரியான் பராக் (துணை கேப்டன்), முஷீர் கான்
  • பந்துவீச்சாளர்கள்: குல்தீப் யாதவ்

IN-A vs IN-B Dream11 Prediction, IN-A vs IN-B Dream11 Team, Duleep Trophy 2024, Fantasy  Cricket Tips, IN-A vs IN-B Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between India A vs India B

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement