Advertisement

INDW vs AUSW, 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிஸ்ப்!

இந்தியா - ஆஸ்திரேலிய மகளிர் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.

Bharathi Kannan
By Bharathi Kannan December 27, 2023 • 22:03 PM
INDW vs AUSW, 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிஸ்ப்!
INDW vs AUSW, 1st ODI: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிஸ்ப்! (Image Source: Google)
Advertisement

ஆஸ்திரேலிய மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய மகளிர் அணி  8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் நாளை தொடங்கவுள்ளது. அதன்படி மும்பை வான்கடே மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது. இரு அணியிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்துள்ளதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

Trending


போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்திய மகளிர் vs ஆஸ்திரேலிய மகளிர்
  • இடம் - வான்கடே கிரிக்கெட் மைதானம், மும்பை
  • நேரம் - மதியம் 1.30 மணி (இந்திய நேரப்படி)

பிட்ச் ரிப்போர்ட்

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் வான்கடே கிரிக்கெட் மைதான பேட்டர்களுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. அதேசமயம் தொடக்க ஓவர்களில் பந்துவீச்சாளர்களால் இந்த மைதானத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். இதனால் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வித்திடலாம்.

நேரலை

ஸ்போர்ட்ஸ் 18 மற்றும் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் இந்தப் போட்டியை ரசிகர்கள் நேரலையில் கண்டு ரசிக்கலாம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 50 
  • இந்திய மகளிர் அணி - 10
  • ஆஸ்திரேலிய மகளிர் அணி - 40

உத்தேச லெவன்

இந்திய மகளிர் அணி - ஸ்மிருதி மந்தனா, ஷெஃபாலி வர்மா, யாஸ்திகா பாட்டியா, ஹர்மன்ப்ரீத் கவுர் (கே), ஜமிமா ரோட்ரிக்ஸ், ஹர்லீன் தியோல், தீபாதி ஷர்மா, ஸ்நே ராணா, பூஜா வஸ்த்ரகர், ரேணுகா சிங் தாக்கூர், டைடாஸ் சாது

ஆஸ்திரேலிய மகளிர் அணி- அலிசா ஹீலி (கே), ஃபோப் லிட்ச்ஃபீல்ட், எல்லிஸ் பெர்ரி, பெத் மூனி, தஹிலா மெக்ராத், ஆஷ்லே கார்ட்னர், அனாபெல் சதர்லேண்ட், மேகன் ஷாட், ஜார்ஜியா வேர்ஹாம், கிம் கார்த், அலனா கிங்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்: பெத் மூனி
  • பேட்ஸ்மேன்கள்: எலிஸ் பெர்ரி (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர்
  • ஆல்ரவுண்டர்: தீப்தி சர்மா (துணை கேப்டன்), தஹிலா மெக்ராத், ஆஷ்லே கார்ட்னர், பூஜா வஸ்த்ரகர்
  • பந்துவீச்சாளர்கள்: அலனா கிங், ரேணுகா சிங், மேகன் ஷாட்

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement