IND vs NZ, 2nd Test: அஸ்வின், மயங்க் அபாரம்; நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா இமாலய வெற்றி!
நியூசிலாந்துக்கு எதிரான மும்பை டெஸ்டை வென்ற இந்திய அணி 1-0 என டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடா் நடைபெற்றது. கான்பூா் டெஸ்ட் டிராவில் முடிந்த நிலையில், இரண்டாவது டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த டிசம்பர் 3ஆம் தேதி தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்று முதலி பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்களுக்கும் இதில்நியூசிலாந்து வீரர் ஆஜாய் படேல் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனைப் படைத்தார்.
Trending
அதன்பின் நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 62 ரன்களுக்கும் ஆட்டமிழந்து. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
பின்னர் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி 70 ஓவா்களில் 276/7 ரன்களுடன் டிக்ளோ் செய்வதாக அறிவித்தது. இதனால் மும்பை டெஸ்டில் நியூசிலாந்து அணி வெற்றி பெற 540 ரன்கள் என்ற பிரம்மாண்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி 45 ஓவா்களில் 140/5 ரன்களை எடுத்துத் தடுமாறியது. ஹென்றி நிக்கோல்ஸ் 36, ரச்சின் ரவீந்திரா 2 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள்.
இந்நிலையில் நியூசிலாந்து அணி இன்று 56.3 ஓவர்களில் 167 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்த இன்னிங்ஸிலும் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார்.
இதன் மூலம் மும்பை டெஸ்டை 372 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி டெஸ்ட் தொடரை 1-0 எனக் கைப்பற்றியது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய மயங்க் அகர்வால் ஆட்டநாயகனாவும், ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர் நாயகனாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
Win Big, Make Your Cricket Tales Now