
IND v NZ: Kane Williamson Will Miss T20Is Against India, Tim Southee Named Captain (Image Source: Google)
நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடர் நவம்பர் 17 அன்று தொடங்கி, நவம்பர் 21 அன்று நிறைவுபெறுகிறது. டெஸ்ட் தொடர் நவம்பர் 25-ல் தொடங்கி, டிசம்பர் 7 அன்று நிறைவுபெறுகிறது.
டி20, டெஸ்ட் தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான டி20 அணியில் தமிழக வீரர் அஸ்வின் இடம்பெற்றுள்ளார். கோலி, ஜடேஜா, பும்ரா, ஷமி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த ஞாயிறன்று துபையில் டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய நியூசிலாந்து அணி, அடுத்த 3ஆவது நாளில் இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரிலும் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடருக்கு முக்கியத்துவம் அளிப்பதற்காக டி20 தொடரிலிருந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.