Advertisement

IND vs SA, 1st ODI: இந்திய அணியின் தோல்விக்கான காரணம் குறித்து ஷிகர் தவான் விளக்கம்!

பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்றிலும் இந்திய அணி சிறப்பாக செயல்படவில்லை என இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

Advertisement
IND v SA, 1st ODI: It was tremendous the way Shreyas, Samson and Shardul played, says Shikhar Dhawan
IND v SA, 1st ODI: It was tremendous the way Shreyas, Samson and Shardul played, says Shikhar Dhawan (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 07, 2022 • 09:57 AM

இந்தியா, தென் ஆப்பிரிக்காவுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி லக்னோவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 07, 2022 • 09:57 AM

அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஜென்மேன் மலான் 22, பவுமா 8, மார்க்கரம் 0 (5) ஆகியோர் பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து டி காக் 48, ஹென்ரிச் கிளாசன் 74, டேவிட் மில்லர் 75 ஆகியோர் சிறப்பாக விளையாடியதால், தென் ஆப்பிரிக்க அணி 40 ஓவர்களில் 249/4 ரன்களை சேர்த்தது.

Trending

அதன்பின் இலக்கை துரத்திக் களமிறங்கிய இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்டர்கள் கேப்டன் ஷிகர் தவன் 4, ஷுப்மன் கில் 3, ருதுராஜ் 19 , இஷான் கிஷன் 20 ஆகியோர் டெஸ்ட் விளையாடி ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து வந்த ஸ்ரேயஸ் ஐயர் 37 பந்துகளில் 50 ரன்களைக் கடந்து ஆட்டமிழந்த பிறகு சஞ்சு சாம்சன், ஷர்தூல் தாகூர் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 

பின்னர் கடைசி மூன்று ஓவர்களில் 45 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது இங்கிடி ஓவரில் ஷர்தூல் தாக்கூர் 33 ஆட்டமிழந்தார். அடுத்து வந்த குல்தீப் யாதவ் கோல்டன் டக் ஆனார். இறுதியில் 6 பந்துகளில் 30 ரன்கள் தேவைப்பட்டது. ஷம்சி சாம்சனுக்கு எதிராக 6,4,4,0,4,1 என மொத்தம் 20 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். 

இதனால் இந்திய அணி 40 ஓவர்களில் 240/8 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி த்ரில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சஞ்சு சாம்சன் 86 ரன்களை அடித்திருந்தார். 

இப்போட்டி முடிந்தப் பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் ஷிகர் தவன், ‘‘கடைசிவரை வீரர்கள் கடுமையாக போராடினார்கள். பேட்டிங்கில் டாப் ஆர்டர் சிறப்பாக செயல்படவில்லை. ஷ்ரேயஷ் ஐயர், சாம்சன், ஷர்தூல் தாகூர் ஆகியோர் அபாரமாக விளையாடினார்கள். இந்த பிட்சில் எக்ஸ்ட்ரா பவுன்ஸ், சரியாக வேகம் இருந்தது. 

இந்த பிட்சில் பௌலர்கள் அதிக ரன்களை விட்டுக்கொடுத்திருக்க கூடாது. பீல்டிங்கும் படுமட்டமாக இருந்தது. இப்போட்டியில் என்ன தவறு செய்தோமோ, அதனை அடுத்த போட்டிக்குள் சரிசெய்து களமிறங்குவோம்” என தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement