பகலிரவு டெஸ்ட்: 100 விழுக்காடு பார்வையாளர்களுக்கு அனுமதி!
இந்தியா இலங்கை அணிகள் மோதும் 2ஆவது டெஸ்ட் போட்டி நடைபெறும் பெங்களூரு மைதானத்தில் போட்டியைக் காண 100 விழுக்காடு பார்வையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மொஹாலியில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.
இவ்விரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் பெங்களூருவில் உள்ள சின்னஸ்வாமி மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டி பகல்-இரவு போட்டி (பிங்க் பால் டெஸ்ட்) ஆகும்.
Trending
இந்நிலையில் இப்போட்டியை காண மைதானத்தில் 50 விழுக்காடு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்ட நிலையில் முதல் இரு நாட்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்தன.
இதைத் தொடர்ந்து கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று 100 சதவீதம் ரசிகர்களை அனுமதிக்க கர்நாடக மாநில அரசு நேற்று ஒப்புதல் வழங்கியது. இதனால் இந்த டெஸ்டில் ரசிகர்களின் ஆரவாரம் வீரர்களுக்கு கூடுதல் உத்வேகம் அளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now