
IND v SL: Jadeja, Ashwin Frustrate Sri Lanka With The Bat In 1st Session, Score 468/7 (Image Source: Google)
இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட் போட்டி மொஹாலியில் நேற்று தொடங்கி நடந்துவருகிறது. ரோஹித் சர்மாவின் கேப்டன்சியில் இந்திய அணி ஆடும் முதல் டெஸ்ட் போட்டி இது. விராட் கோலியின் 100ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டி இதுவாகும்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்களைச் சேர்த்தது. இந்திய அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 45 ரன்களுடனும், ரவிச்சந்திரன் அஸின் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் இரண்டாவது நாள் ஆட்டத்தை தொடர்ந்த ஜடேஜாவும் அஸ்வினும் இணைந்து அபாரமாக விளையாடினர். ஜடேஜா சிறப்பாக ஆட, அஸ்வின் அடித்து ஆடி வேகமாக ஸ்கோரை உயர்த்தினர்.