Advertisement

IND vs ENG, 1st T20I: பட்லர் அரைசதம்; இங்கிலாந்தை 132 ரன்களில் சுருட்டியது இந்தியா!

இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸை இழந்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 133 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement
IND vs ENG, 1st T20I: பட்லர் அரைசதம்; இங்கிலாந்தை 132 ரன்களில் சுருட்டியது இந்தியா!
IND vs ENG, 1st T20I: பட்லர் அரைசதம்; இங்கிலாந்தை 132 ரன்களில் சுருட்டியது இந்தியா! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 22, 2025 • 08:42 PM

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரானது இன்று (ஜனவரி 22) முதல் தொடங்கியது.  கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
January 22, 2025 • 08:42 PM

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் மற்றும் பென் டக்கெட் இணை தொடக்கம் கொடுத்தனர். இப்போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பில் சால்ட் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய ஜோஸ் பட்லர் ஒருபக்கம் அபாரமாக விளையாடி ஸ்கோரை உயர்த்திய நிலையில், மற்றொரு தொடக்க வீரர் பென் டக்கெட்டும் 4 ரன்களுடன் விக்கெட்டை இழந்தார். பின்னர் பட்லருடன் இணைந்த ஹாரி ப்ரூக் ஓரளவு தாக்குப்பிடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் இறங்கினார். 

Trending

இருவரும் இணைந்து 48 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த நிலையில், அதிரடியாக விளையாட முயற்சித்த ஹாரி புரூக் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 17 ரன்களைச் சேர்த்த கையோடு விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய நட்சத்திர ஆல் ரவுண்டர் லியாம் லிவிங்ஸ்டோன் இரண்டாவது பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றைத்தைக் கொடுக்க, அடுத்து களமிறங்கிய ஜேக்கப் பெத்தெல் 7 ரன்களுக்கும், ஜேமி ஓவர்டன் 2 ரன்களுக்கும், கஸ் அட்கின்சன் 2 ரன்களுக்கும் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

Also Read: Funding To Save Test Cricket

ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த கேப்டன் ஜோஸ் பட்லர் அரைசதம் கடந்து அணியை சரிவிலிருந்து மீட்க, 8 பவுண்டரி, 2 சிக்ஸர் என 68 ரன்களில் அவரும் ஆட்டமிழந்தார். இறுதியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 12 ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்திய அணி தரப்பில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளையும், அர்ஷ்தீப் சிங் மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement