Advertisement

IND vs ENG, T20I: வாழ்வா சாவா ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து!

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஐந்தாவது போட்டி நாளை அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.

Advertisement
Cricket Image for IND vs ENG, T20I: வாழ்வா சாவா ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து!
Cricket Image for IND vs ENG, T20I: வாழ்வா சாவா ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து! (Indian Cricket Team (Image Source: Google))
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 19, 2021 • 10:55 PM

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடிவருகிறது. இத்தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள நான்கு போட்டிகளில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளைப் பெற்று சம நிலையில் உள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 19, 2021 • 10:55 PM

இந்நிலையில், டி20 தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் ஐந்தாவது டி20 போட்டி நாளை இரவு 7 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் வெற்றிபெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Trending

இந்திய அணி

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இத்தொடரின் முதல் மற்றும் மூன்றாவது போட்டிகளில் தோல்வியைத் தழுவினாலும் இரண்டாவது மற்றும் நான்காவது போட்டிகளில் வெற்றியை ஈட்டி தொடரை தக்கவைத்துள்ளது.

அதிலும் இந்தத் தொடரில் அறிமுக வீரர்களாகக் களமிறங்கிய இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அபாரமான ஆட்டம் இந்திய அணிக்குப் பெரும் வலுவைச் சேர்த்து எதிரணிக்கு மிரட்டல் விடுக்கிறது. அதேபோல் முதல் இரண்டு போட்டிகளாகக் களமிறங்காமல் இருந்த அதிரடி வீரர் ரோஹித் சர்மாவும் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருகிறார்.

ரன் மெஷின் விராட் கோலி, கன்சிஸ்டன்சி ஸ்ரேயாஸ், கேமியோ பந்த், பாண்டியா என பேட்டிங்கில் அசுரபலத்தை வெளிப்படுத்திவரும் இந்திய அணிக்கு, பந்துவீச்சு தரப்பில் பும்ரா, ஷமி இல்லாதது சற்று பின்னடைவையே ஏற்படுத்தியுள்ளது.அதே சமயம் கடந்த சில போட்டிகளில் யுஸ்வேந்திர சஹால், வாஷிங்டன் சுந்தர் ஆகியோரது ஓவர்களை இங்கிலாந்து வீரர்கள் வெளுத்துவாங்குவதும் ஒரு காரணம். 

அணியின் பேட்டிங்கிற்கு ஏற்றவாறு பந்துவீச்சாளர்கள் இல்லாததே இந்திய அணி அடைந்த தோல்விகளுக்கு காரணம் என வல்லுநர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இவை அனைத்தையும் சரிசெய்து, கடைசி டி20 போட்டியை இந்திய அணி வெல்வது என்பது சவாலான காரியம் என்றே ரசிகர்களின் சிந்தனையாகவும் உள்ளது. இதற்கான பதில் நாளைய போட்டியின் முடிவிலேயே தெரியவரும்.

Advertisement

Read More

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement