Advertisement
Advertisement
Advertisement

இந்தியா vs நியூசிலாந்து, மூன்றாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 1ஆம் தேதி மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement
இந்தியா vs நியூசிலாந்து, மூன்றாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
இந்தியா vs நியூசிலாந்து, மூன்றாவது டெஸ்ட் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Cricketnmore)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 30, 2024 • 06:15 PM

India vs New Zealand 3rd Test Dream11 Prediction: நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இத்தொடரில் நடந்து முடிந்துள்ள முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவில் நியூசிலாந்து அணியானது 2-0 என்ற கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியதுடன் இந்திய மண்ணில்முதல் முறையாக டெஸ்ட் டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 30, 2024 • 06:15 PM

இந்நிலையில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 1ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தோல்வியைத் தழுவியதுடன் தொடரையும் இழந்துள்ள இந்திய அணி, மூன்றாவது போட்டியில் வெற்றிபெற்று ஒயிட்வாஷை தவிர்க்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.

Trending

IND vs NZ 3rd Test: போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - இந்தியா vs நியூசிலாந்து
  • இடம் - வான்கடே கிரிக்கெட் மைதானம், மும்பை
  • நேரம் - நவம்பர் 01, காலை 9.30 மணி

IND vs NZ 3rd Test Pitch Report

மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 28 சர்வதேச டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 11 முறையும், இரண்டாவது பேட்டிங் செய்த அணி 09 முறையும் வெற்றியைப் பதிவுய்செய்து அசத்தியுள்ளன. மேற்கொண்டு இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 334 ரன்களாக உள்ளது. அதேசமயம் நான்காவது இன்னிங்ஸ் சராசரி 128 ரன்களாக உள்ளது. அதனால் இந்த மைதானத்தில் நேரம் செல்ல செல்ல பேட்டிங் செய்வது மிகவும் கடினமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.  இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம்.

IND vs NZ 3rd Test: Where to Watch?

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சி நேரலை ஒளிபரப்பு செய்கிறது. அதேசமயம் ஆன்லைனில் பார்க்க விரும்பும் ரசிகர்கள் ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் நேரலையில் கண்டுகளிக்கலாம். 

IND vs NZ Test  Head To Head Record

  • மோதிய போட்டிகள் - 64
  • இந்தியா - 22
  • நியூசிலாந்து - 15
  • முடிவில்லை - 27

India vs New Zealand 2nd Test Probable Playing XI

இந்திய உத்தேச லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், விராட் கோலி, ரிஷப் பந்த், கேஎல் ராகுல்/சர்ஃப்ராஸ் கான், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப்/ ஹர்ஷித் ரானா, ஜஸ்பிரித் பும்ரா.

நியூசிலாந்து உத்தேச லெவன்: டாம் லாதம் (கேப்டன்), டெவான் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் பிளென்டெல், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், டிம் சௌதீ, அஜாஸ் படேல், வில்லியம் ஓர்ர்கே

IND vs NZ 2nd Test Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த்
  • பேட்ஸ்மேன்கள் - டெவான் கான்வே, விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால்
  • ஆல்-ரவுண்டர் - ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஷ்வின் (கேப்டன்), மிட்செல் சான்ட்னர் (துணைக்கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள் - அஜாஸ் படேல்.

IND vs NZ 3rd Test Dream11 Prediction, IND vs NZ Dream11 Prediction, Today Match IND vs NZ, IND vs NZ Test Series, IND vs NZ Dream11 Team, Fantasy Cricket Tips, IND vs NZ Pitch Report, Today Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between India vs New Zealand

Also Read: Funding To Save Test Cricket

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement