
Ind vs NZ: Sourav Ganguly to ring Eden Bell to commence third T20 (Image Source: Google)
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நியூசிலாந்து அணி மூன்று டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் நாளை ராஞ்சியில் நடைபெறும் இரண்டாவது டி20 போட்டியில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்துகின்றன. மேலும் இத்தொடரின் கடைசி மற்றும் மூன்றாவது டி20 போட்டி கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டியை தொடக்கி வைக்கும் விதமாக ஈடன் கார்டனில் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி மணியடித்து போட்டியைத் தொடக்கிவைக்கவுள்ளார்.