IND vs PAK, Asia Cup 2023: போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளை நடைபெறும் லீக் போட்டியில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய திருவிழாவான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் இந்தியாவில் தொடங்க உள்ள நிலையில், அதற்கு முன்பு மினி கிரிக்கெட் திருவிழாவாக ஆசிய கோப்பைத் தொடர் நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தான், இலங்கை நாடுகள் இணைந்து நடத்தும் இந்த தொடர் பாகிஸ்தானில் கடந்த 30ஆம் தேதியே தொடங்கிவிட்டது. பாகிஸ்தான், இலங்கை அணிகள் வெற்றியுடன் இந்த தொடரை தொடங்கியுள்ள நிலையில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி நாளை நடக்கிறது.
Trending
இந்திய அணி இந்த ஆசிய கோப்பையில் முதல் போட்டியிலே பாகிஸ்தானுடன் மோதுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையின் பல்லகலே மைதானத்தில் இந்த போட்டி மதியம் நடைபெற உள்ளது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - இந்தியா vs பாகிஸ்தான்
- இடம் - பல்லகலே கிரிக்கெட் மைதானம், இலங்கை
- நேரம் - மாலை 3 மணி
போட்டி முன்னோட்டம்
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரையில் நேபாளத்திற்கு எதிராக 342 ரன்கள் குவித்தது அவர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. கேப்டன் பாபர் அசாம், ரிஸ்வான், இப்திகார், இமாம் உல் ஹக், பக்கர் ஜமான் ஆகியோர் அந்த அணியின் பேட்டிங் பலம் ஆவார்கள்.
பாகிஸ்தான் அணி அன்று முதல் இன்று வரை பந்துவீச்சில் பலமாகவே இருந்து வருகின்றனர். ஷாஹீன் அப்ரீடி புதிய பந்தில் விக்கெட் வீழ்த்துவதில் வல்லவராக உள்ளார். அவருடன் நசீம்ஷா, ஹாரீஷ் ராஃப் வேகத்தில் கூடுதல் பலமாக உள்ளனர். ஷதாப்கான், முகமது நவாசும் பந்துவீச்சில் அசத்தினால் அவர்களுக்கு பலம் ஆகும்.
மறுபக்கம் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் இளம் வீரர்களுக்கும் இந்த தொடர் அருமையான வாய்ப்பாக அமையும். ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஜடேஜா என இந்திய பேட்டிங் ஆர்டர் சிறப்பாக ஆடினால் நிச்சயம் இந்தியா ரன் வேட்டையில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தும்.
இந்திய அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரையில் ஜஸ்ப்ரித் பும்ராவின் கம்பேக் பெரும் எதிர்பார்ப்புகளை கூட்டியுள்ளது. அவருடன் முகமது சிராஜ், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, குல்தீல் யாதவ் ஆகியோருடன், ஹர்திக் பாண்டியாவும் ஒரு சில ஓவர்கள் வீசுவார் என்பதால் நிச்சயம் இது அணியின் பலமாகப்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 132
- இந்தியா - 55
- பாகிஸ்தான் - 73
- முடிவில்லை - 04
மழைக்கு வாய்ப்பு:
ரசிகர்கள் இந்த போட்டியை காண மிகுந்த ஆவலுடன் உள்ள நிலையில், நாளை பல்லேகேலே மைதானத்தில் மழை பெய்வதற்கு 90 சதவீத வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், இரு நாட்டு ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உத்தேச லெவன்
இந்தியா: ரோஹித் சர்மா (கே), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.
பாகிஸ்தான்: ஃபகார் ஸமான், இமாம் உல் ஹக், பாபர் ஆசாம் (கே), முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், இஃப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், நசீம் ஷா, ஷஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரவூஃப்.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர் - முகமது ரிஸ்வான்
- பேட்ஸ்மேன்கள்- விராட் கோலி, பாபர் ஆசாம் (கே), இஃப்திகார் அகமது, ஷுப்மான் கில்
- ஆல்ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ஹர்திக் பாண்டியா, ஷதாப் கான்
- பந்துவீச்சாளர்கள்- ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், ஷஹீன் ஷா அஃப்ரிடி
Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.
Win Big, Make Your Cricket Tales Now