
Ind vs SA, 3rd Test: Pacer Mohammed Shami can join Anil Kumble, Javagal Srinath in elite list (Image Source: Google)
இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என சமனடைந்துள்ளது.
கேப்டவுனில் நாளை தொடங்கும் 3ஆவது டெஸ்ட் போட்டி தான் தொடரின் முடிவை தீர்மானிக்கும். இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 5 விக்கெட் வீழ்த்தும் பட்சத்தில் புதிய மைல் கல்லை எட்டவுள்ளார்.
முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியில் 8 விக்கெட்டுகளும், 2வது டெஸ்ட்டில் 3 விக்கெட்டுகளும் என மொத்தம் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் ஷமி. இதுவரை மொத்தமாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 45 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.