
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் தென் ஆப்பிரிக்க அணி ஜூன் 9 முதல் ஜூன் 19 வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது. இந்திய அணியின் சீனியர் வீரர்கள் அனைவரும் ஓய்வில்லாமல் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, தற்போது ஐபிஎல் போன்றவற்றில் விளையாடி வருவதால், அவர்களுக்கு தென் ஆப்பிரிக்க தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்காரணமாக தென் ஆப்பிரிக்க தொடக்கான இந்திய அணியிலிருந்து ரோஹித் சர்மா, விராட் கோலி, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் மற்றும் துணைக்கேப்டனாக ரிஷப் பந்த் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் கலக்கிய தினேஷ் கார்த்திக், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், தீபக் ஹூடா ஆகியோருக்கும் இத்தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.