
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை இந்திய அணி ஒரு வெற்றியும், தென் ஆப்பிரிக்க அணி 2 வெற்றிகளையும் பெற்றுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள 4ஆவது டி20 போட்டி இன்று இரவு ராஜ்கோட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்திய அணியில் ஓப்பனிங்கில் ருதுராஜ் ஃபார்முக்கு வந்துவிட்டார். மிடில் ஆர்டரும் ஹர்திக், தினேஷ் கார்த்திக், ஸ்ரேயாஸ் என நன்றாக உள்ளது. ஆனால் கேப்டன் ரிஷப் பந்த் மட்டும் தான் இன்னும் சொதப்பி வருகிறார்.
வழக்கமாக அதிரடி மூலமே ரன் குவிக்கும், பந்தை ஸ்லோயர் பந்துகள் மூலம் ஒற்றை இலக்க ரன்களில் தென்னாப்பிரிக்க பவுலர்கள் சுருட்டிவிடுகின்றனர். இதனால் இனி அவரை நீக்கிவிட வேண்டும் என ரசிகர்கள் விமர்சனங்களை அடுக்கி வருகின்றனர். இந்த தொடரில் தன்னை நிரூபித்தே தீர வேண்டும் என்ற கட்டாயமும் உள்ளது.