SA vs IND: ஸ்லேஜிங்கில் வச்சு செய்யும் ரிஷப் பந்த்; ரசிகர்கள் கொண்டாட்டம்!
இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியின் போது வீரர்கள் ஸ்லேஜிங்கில் ஈடுபட்டது ரசிகர்களுக்கு பெரும் பொழுதுப்போக்காக மாறியுள்ளது.
தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற இன்னும் 122 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலை உள்ளது.
இப்போட்டியில் பேட்டிங், பந்துவீச்சையும் தாண்டி வீரர்கள் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் மோதி கொண்டும், ஸ்லேஜ் செய்து கொண்டும் வருகின்றனர். இதனால் ரசிகர்களுக்கு இந்த டெஸ்ட் போட்டி பெரும் பொழுதுப்போக்காக அமைந்துள்ளது. இதனால் இந்த போட்டியின் முடிவு பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
Trending
இந்திய அணி தங்களது 2ஆவது இன்னிங்சில் பேட் செய்யும் போது தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஸ்லேஜ் செய்தனர். இந்திய வீரர்களின் கவனத்தை குலைக்கும் வகையில் தென் ஆப்பிரிக்க வீரர்கள் நடந்து கொண்டனர். குறிப்பாக ரிஷப் பந்த்க்கு ஷாட் பாலாக வீசியும் கேலியும் செய்ய, அவர் டக் அவுட்டாகி வெளியேறினார்
இதே போன்று பும்ராவையும் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் விட்டுவைக்கவில்லை. அவர் பேட்டிங் செய்த போது, அவருக்கு காயம் ஏற்படுத்தும் விதமாக பந்துவீசி சண்டைக்கு அழைத்து வம்பிழுத்தனர். நேற்று கேப்டன் கேஎல் ராகுலையும் இதே போன்று தென் ஆப்பிரிக்க வீரர்கள் வம்பிழுத்தனர்.
இதனால் கடுப்பான இந்திய வீரர்கள் தற்போது தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு அவர்களது மருந்தையே திருப்பி கொடுத்தனர். குறிப்பாக ஸ்டம்புக்கு பின்னால் நின்று கொண்ட ரிஷப் பந்த், தென் ஆப்பிரிக்க வீரர்களை வச்சு செய்தார்.
அதன்படி தென் ஆப்பிரிக்க வீரர் வெண்டர் டுசன் பேட்டிங் செய்ய வந்தார். ஒவ்வொரு அணிக்கும் 4வது வீரர் மிகவும் முக்கியம். ஆனால் வெண்டர்டுசன் 4ஆவது வீரராக களமிறங்கி இந்த தொடரில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் அவரை கிண்டல் செய்யும் விதமாக, வந்து இறங்குவது 4ஆவது வீரராக, ஆனால் பேட்டிங் பற்றி ஒன்னும் தெரியாது.
ஆனால் எதிரணி வீரர்களை கேலி மட்டும் செய்ய தெரியும் என்று வம்பிழுத்தார். இதே போன்று டீன் எல்கரையும் ரிஷப் பந்த் தொடர்ந்து கிண்டல் செய்தே வந்தார். பும்ரா, ஷர்துல் தாக்கூர், ஷமியும் தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு ஷாட் பாலை வீசி நெருக்கடி அளித்தனர். தென் ஆப்பிரிக்க வீரர்களுக்கு அவர்களது பாணியில் ரிஷப் பந்த் திருப்பி தருவதுக்கு ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now