தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சஞ்சு சாம்சன்; ரசிகர்கள் ஆத்திரம்!
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் இந்திய அணி சேர்க்கப்படாதது அவரது ரசிகர்களை பெரும் ஏமாற்றமடையச் செய்துள்ளது.
ஐசிசி டி20 உலக கோப்பை தொடருக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டரான தீபக் ஹூடாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவர் வரும் 28ஆம் தேதி தொடங்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தீபக் ஹூடா இடம்பெறவில்லை. இதனால் மாற்று வீரரை பிசிசியை அறிவித்துள்ளது. டி20 உலக கோப்பை தொடரின் போது பி சி சி ஐ அறிவித்த இந்திய அணியில் சஞ்சு சம்சனுக்கு இடம் கிடைக்கவில்லை.
Trending
இந்திய அணியில் ஏற்கனவே தினேஷ் கார்த்திக், ரிஷப் பந்த் ஆகியோர் உள்ளதால் சாம்சனுக்கு இடம் வழங்கவில்லை என தேர்வு குழுவினர் தெரிவித்தனர். இதனால் சஞ்சு சாம்சன் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இதனை அடுத்து அவர்களை சமாளிக்க இந்திய ஏ அணி தொடரில் சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார் .
இந்த நிலையில், தீபக் ஹூடாவுக்கு காயம் ஏற்பட்டதால் மீண்டும் அணியில் சஞ்சு சாம்சன் திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பி சி சி ஐ இம்முறையும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்காமல் இருட்டடிப்பு செய்துள்ளது. தீபக் ஹூடா பதிலாக ஸ்ரேயாஸ் ஐயரை இந்திய அணியில் பிசிசிஐ சேர்த்துள்ளது. இது ரசிகர்களை ஆத்திரமடைய செய்துள்ளது.
டி20 உலக கோப்பை நடைபெறும் ஆஸ்திரேலியா மைதானங்களில் சஞ்சு சாம்சனின் அதிரடி ஆட்டம் ஏற்ற வகையில் அமைந்திருக்கும். இதனை ரோஹித் சர்மா ஏற்கனவே பலமுறை கூறியிருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் சாம்சன் பெயர் பரிசளிக்கப்படவில்லை. அண்மை காலமாக டி20 போட்டிகளில் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு உதவி இருக்கிறார். விக்கெட் கீப்பர் ஆகவும் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.
ஆனால் ஸ்ரேயாஸ் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டும் தான் அரை சுதம் அடித்தார். மற்ற போட்டிகளில் அவரும் சொதப்பி இருக்கிறார். நிலைமை இப்படி இருக்க சஞ்சு சாம்சனுக்கு ஏன் வாய்ப்பு தரவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை அணியில் ரிஷப் பந்த் இருக்கும் நிலையில் சஞ்சு சம்சனும் இந்திய அணிக்கு திரும்பினால் அது அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் ஸ்ரேயாஸ் ஐயரை எடுத்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now