IND vs SL, 1st ODI: டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்!
இந்திய அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடரில் விளையாட இலங்கை சென்றுள்ளது.
இந்நிலையில் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை தூண்டி வரும் இத்தொடரின் முதல் ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் தசுன் ஷானகா முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளார்.
இப்போட்டிக்கான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான் ஆகியோர் அறிமுக வீரர்களாக களமிறங்குகின்றனர். இலங்கை அணி தரப்பில் பானுகா ராஜபக்ஷ அறிமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கை -மினோத் பானுகா, அவிஷ்கா ஃபெர்னாண்டோ, பானுகா ராஜ்பக்ஷ, தனஞ்சய டி சில்வா, வாணிந்து ஹசரங்கா, தாசுன் ஷானகா (கே), சரித் அசலங்கா, சாமிகா கருணாரத்ன, இசுரு உதனா, லக்ஷன் சண்டகன், துஷ்மந்தா சாமிரா.
இந்தியா - ஷிகர் தவான்(கே), பிருத்வி ஷா, சூர்யகுமார் யாதவ், மணீஷ் பாண்டே, இஷான் கிஷான், ஹார்திக் பாண்டியா, குர்னால் பாண்டியா, தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல்.
Win Big, Make Your Cricket Tales Now