IND vs SL, 3rd T20I : டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்!
இலங்கை அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.
அதேசமயம் இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் காயமடைந்த நவ்தீப் சைனிக்கு பதிலாக அறிமுக வீரர் சந்தீப் வாரியருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை (விளையாடும் லெவன்): அவிஷ்கா ஃபெர்னாண்டோ, மினோத் பானுகா, தனஞ்சய டி சில்வா, சதீரா சமரவிக்ரமா, தசுன் ஷானகா (கே), ரமேஷ் மெண்டிஸ், வாணிந்து ஹசரங்கா, சாமிகா கருணாரத்ன, பதும் நிசான்கா, அகிலா தனமந்தா
இந்தியா (விளையாடும் லெவன்): ஷிகர் தவான் (கே), ருதுராஜ் கெய்க்வாட், தேவதூத் பாடிக்கல், சஞ்சு சாம்சன், நிதீஷ் ராணா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், ராகுல் சஹார், சந்தீப் வாரியர், சேதன் சாகரியா, வருண் சக்கரவர்த்தி.
Win Big, Make Your Cricket Tales Now