IND vs SL: இந்திய அணியில் அக்ஸர் படேல் சேர்ப்பு!
இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்டில் இந்திய அணியில் குல்தீப் யாதவ் விடுவிக்கப்பட்டு, அக்ஷர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார்.
மொஹலியில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்டை இந்திய அணி, ஒரு இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 129.2 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்தது. ஜடேஜா 175 ரன்களுடன் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தார் ரோஹித் சர்மா.
இதனால் ரசிகர்கள் பலரும் ஏமாற்றம் அடைந்தார்கள். இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 174 ரன்கள் எடுத்து ஃபாலோ ஆன் ஆகி, 2-வது இன்னிங்ஸில் 178 ரன்களுடன் இன்னிங்ஸ் தோல்வியை எதிர்கொண்டது. இதனால் 2 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
Trending
இந்நிலையில் மார்ச் 12 முதல் பெங்களூரில் நடைபெறவுள்ள 2ஆவது டெஸ்டுக்கான இந்திய அணியில் அக்ஷர் படேல் சேர்க்கப்பட்டுள்ளார். அணியில் ஏற்கனவே இடம்பிடித்திருந்த குல்தீப் யாதவ் விடுவிக்கப்பட்டுள்ளார். காயம் மற்றும் கரோனா காரணமாக இந்திய அணியில் சமீபகாலமாக அக்ஷர் படேல் இடம்பெறவில்லை.
மொஹலி டெஸ்டில் 3ஆவது சுழற்பந்து வீச்சாளராக விளையாடிய ஜெயந்த் யாதவ், ஒரு விக்கெட்டும் எடுக்காததால், பெங்களூர் டெஸ்டில் அக்ஷர் படேல் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை விளையாடிய 5 டெஸ்டுகளில் 36 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now