Advertisement
Advertisement
Advertisement

டி20 கிரிக்கெட்டில் சாதனைப்படைக்க காத்திருக்கும் யுஸ்வேந்திர சஹால்!

யுஸ்வேந்திர சாஹல் இன்னும் 4 விக்கெட் வீழ்த்தினால் டி20 கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகள் வீழ்த்திய 4ஆவது இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை படைப்பார்.

Bharathi Kannan
By Bharathi Kannan February 26, 2022 • 17:08 PM
IND vs SL: Chahal on verge of scripting huge T20I world record
IND vs SL: Chahal on verge of scripting huge T20I world record (Image Source: Google)
Advertisement

இந்தியா - இலங்கை இடையேயான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்திய இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்தார்.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 66 விக்கெட்டுகளுடன் பும்ரா மற்றும் சாஹல் ஆகிய இருவரும் முதலிடத்தை பகிர்ந்துகொன்டிருந்தனர். இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பும்ரா விக்கெட் எதுவும் வீழ்த்தாத நிலையில், சாஹல் ஒரு விக்கெட்டை வீழ்த்தி 67 விக்கெட்டுகளுடன், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்றார்.

Trending


சாஹல் இன்னும் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினால், டி20 கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டும் 4ஆவது இந்திய பவுலர் என்ற சாதனையை படைப்பார்.

இதற்கு முன்பாக பியூஷ் சாவ்லா (270 விக்கெட்டுகள்), ரவிச்சந்திரன் அஸ்வின் (264) மற்றும் அமித் மிஷ்ரா (62) ஆகிய மூவரும் டி20 கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ள நிலையில், 246 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள சாஹல் இன்னும்  4 விக்கெட் வீழ்த்தினால் இந்த பட்டியலில் இணைவார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement