
IND vs SL: Kusal Mendis Ruled Out Of 1st Test Due To Injury, Dushmantha Chameera Rested; Confirms Ca (Image Source: Google)
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடரில் 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடர் நாளை முதல் மொஹலி மைதானத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில் இப்போட்டிக்காக இரு அணிகளும் சில தினங்களுக்கு முன்னதாகவே மொஹாலி சென்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கிடையில் இலங்கை அணியில் நட்சத்திர வீரரான குசால் மெண்டிஸ் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என அந்த அணியின் கேப்டன் திமுத் கருணரத்னே இன்று தெரிவித்துள்ளார்.