
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 2ஆவது டி20 போட்டி நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முன்னதாக குர்னால் பாண்டியாவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக அவருடன் சேர்த்து 8 வீரர்கள் இந்த போட்டியில் பங்கேற்க இயலாத முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக இந்திய அணியில் நான்கு அறிமுக வீரர்கள் களம் இறங்கி விளையாடினர்.
மேலும் இந்த போட்டியில் 5 பேட்ஸ்மேன்கள் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடினார். மற்றபடி ஆறு பந்துவீச்சாளர்கள் களமிறங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை மட்டுமே குவித்தது. இதில் தவான் அதிகபட்சமாக 40 ரன்களை குவித்தார்.
அதன் பின்னர் 133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற என்ற இலக்கினை துரத்திய இலங்கை அணியை அவ்வளவு எளிதாக வெற்றி இலக்கை அடைய இந்திய பவுலர்கள் விடவில்லை. இறுதியில் இலங்கை அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. அதில் தனஞ்செயா டி சில்வா 40 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.