Advertisement

பேட்டிங்கில் சொதப்பியதே தோல்விக்கு காரணம் - ஷிகர் தவான்

பேட்டிங்கில் சரிவர செயல்படாததே எங்களின் தோல்விக்கு முக்கிய காரணமென இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

Advertisement
IND vs SL: Shikhar Dhawan reveals defeat against Sri Lanka t20 series
IND vs SL: Shikhar Dhawan reveals defeat against Sri Lanka t20 series (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jul 30, 2021 • 10:09 AM

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான 3ஆவது டி20 போட்டியானது நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரை கைப்பற்றும் என்பதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்திலிருந்தது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
July 30, 2021 • 10:09 AM

ஆனால் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதன் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 81 ரன்கள் மட்டுமே குவித்தது.

Trending

அதன் பின்னர் 82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி 14.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது மட்டுமின்றி, டி20 தொடரை 2 -1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. 

இந்நிலையில் போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் தவான் கூறுகையில் “இந்தப் போட்டியில் எங்களது நிலைமை சற்று கடினமாக இருந்தது. இந்தப் போட்டியிலும் நாங்கள் வெற்றி பெறவே நினைத்தோம். இந்த போட்டியில் வீரர்கள் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. கடைசி இரண்டு போட்டிகளாக இளம் வீரர்கள் நல்ல போராட்டத்தை காண்பித்து வருகின்றனர். 

இருப்பினும் கடந்த இரண்டு போட்டிகளாக ஏற்பட்ட தோல்வியிலிருந்து நிறையக் கற்றுக்கொண்டோம். இன்றைய போட்டியில் எங்களது தோல்விக்கு முக்கிய காரணமாக பேட்டிங்கில் சொதப்பியதுதான் காரணமாக அமைந்தது. துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்ததால் அணியின் மீது அழுத்தம் ஏற்பட்டது.

அதன் பிறகு நாங்கள் தொடர்ந்து விக்கெட்களை இழந்து விட்டோம். இலங்கை அணி சிறப்பாக பந்துவீசியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் எங்களுக்கு அழுத்தம் அதிகரித்து எங்களால் ரன்களை குவிக்க முடியாமல் போனது என்று தவான் தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement