
IND vs SL: Sri Lanka's Pathum Nissanka, Dushmantha Chameera ruled out of second Test (Image Source: Google)
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் பகலிரவு ஆட்டமாக நாளை நடைபெறுகிறது.
இப்போட்டிக்காக இரு அணிகளும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் இப்போட்டிக்கான இலங்கை அணியிலிருந்து பதும் நிஷங்கா, துஷ்மந்தா சமீரா ஆகியோர் விலகியுள்ளனர்.
இதனை இலங்கை கிரிக்கெட் வாரியமும் உறுதிசெய்துள்ளது. மேலும் துஷ்மந்தா சமீராவை நிர்வகித்து, உலகக் கோப்பை வரை வெள்ளை பந்து கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுமாறு மருத்துவக் குழுவால் அணிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அவரது டெஸ்ட் வாழ்க்கையின் முடிவுக்கு வந்துள்ளதாகும் சந்தேகிக்கப்படுகிறது.