இஷான் கிஷானை ரொம்ப புகழ வேண்டாம் - சுனில் கவாஸ்கர்
இஷான் கிஷானின் சிறப்பான ஆட்டத்தை அனைவரும் பாராட்டும் நிலையில் கவாஸ்கர் மட்டும் முக்கிய குறையை கூறியுள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நேற்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்த போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வெற்றிக்கு முக்கிய காரணமாக இஷான் கிஷண் அமைந்தார்.'
Trending
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3 டி20 போட்டிகளிலும் இஷான் மீது விமர்சனங்கள் எழுந்தன. அவரின் ஸ்டரைக் ரேட் ஏன் இவ்வளவு மோசமாக உள்ளது எனக்கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் அதற்கெல்லாம் நேற்று பதில் கொடுத்தார். 56 பந்துகளை சந்தித்த அவர், 10 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 89 ரன்களை விளாசினார். இதற்காக அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கவாஸ்கர் மட்டும் குறைக்கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “இஷானின் பேட்டிங் ஒரு சிறப்பான அறிகுறியை தந்துள்ளது. ஆனால் இது முதல் போட்டி தான். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் எவ்வளவு திணறினார் என்பதை அனைவரும் பார்த்தோம். அங்கிருந்து லெந்த், வேகம் மற்றும் பவுன்சர்களை விட இங்கு குறைவாக இருந்தது. இங்கு பந்துகள் தோள்பட்டை வரை தான் வந்தது. இதனால் அவருக்கு சுலபமாக இருந்தது.
இதற்காக அவரின் ஒட்டுமொத்த ஆட்டத்தையும் குறைகூறவில்லை. சில ட்ரைவ் ஷாட்கள், புல் ஷாட்கள் மிகச்சிறப்பாக இருந்தன. எனினும் இது முதல் போட்டி தான். அடுத்த 2 போட்டிகளிலும் அவரின் நிலையான ஆட்டம் என்வென்பது தெரிந்துவிடும். ஒருவேளை அதிலும் சிறப்பாக ஆடிவிட்டால் இந்திய அணிக்கு பெரும் நன்மை தான்.
ஏனென்றால் இஷானிடம் மூன்று திறமைகள் ஒருசேர உள்ளது. விக்கெட் கீப்பர், இடதுகை பேட்ஸ்மேன், டாப் ஆர்டர்- மிடில் ஆர்டர் என எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். அதிரடியாக ஆடுபவர். இந்த அத்தனையும் நமக்கு நன்மையாக இருக்கும். பொருத்திருந்து பார்க்கலாம்” என தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now