Advertisement

ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்ற நிலையில், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

Advertisement
IND vs SL: Updated ICC World Test Championship Points Table After India vs Sri Lanka 1st Test
IND vs SL: Updated ICC World Test Championship Points Table After India vs Sri Lanka 1st Test (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 06, 2022 • 07:26 PM

ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான புள்ளி பட்டியலில், ஒவ்வொரு அணியும் ஆடும் டெஸ்ட் போட்டிகளில் பெறும் வெற்றிகளை வைத்து வெற்றி விகிதங்கள் கணக்கிடப்பட்டு, அதன்படி வரிசைப்படுத்தப்படுகின்றன.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 06, 2022 • 07:26 PM

இறுதிப்போட்டிக்கு முன் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதும். 

Trending

கடந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியாவும் நியூசிலாந்தும் மோதின. நியூசிலாந்து அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றது. ஆனால் இம்முறை இந்த இரண்டு அணிகளும் புள்ளி பட்டியலில் பின் தங்கியுள்ளன.

ஆஷஸ் தொடரில் அபாரமாக ஆடி 4-0 என தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி, 86.66 வெற்றி சதவிகிதத்துடன் 2ஆம் இடத்தில் இருந்தது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான வெறும் 2 டெஸ்ட் போட்டிகளில் ஆடி அதில் வெற்றி பெற்று 100 சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருந்துவந்த இலங்கை அணி, இந்தியாவிடம் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்ததையடுத்து, 66.66 என்ற வெற்றி சதவிகிதத்துடன் புள்ளி பட்டியலில் 3ஆம் இடத்திற்கு பின் தங்கியுள்ளது. 

இதனால் 2ஆம் இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி முதலிடத்திற்கு முன்னேறிவிட்டது. 2ஆம் இடத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது. தென் ஆப்பிரிக்க அணி 60 வெற்றி சதவிகிதத்துடன் 4ஆம் இடத்தில் உள்ளது. இந்திய அணி இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் வெற்றிக்கு பிறகும்  புள்ளி பட்டியலில் 5ஆம் இடத்திலேயே நீடிக்கிறது. ஆனால் வெற்றி சதவிகிதம் 54.16%ஆக அதிகரித்துள்ளது.

புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி 6ஆம் இடத்திலும், இங்கிலாந்து அணி கடைசி இடத்திலும் உள்ளன.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement