இந்திய அணியில் மேலும் இருவருக்கு கரோனா உறுதி; சக வீரர்கள் அச்சம்!
இலங்கை அணிக்கெதிரான தொடரில் இடம்பெற்றிருந்த இந்திய வீரர்கள் யுஸ்வேந்திர சஹால், கிருஷ்ணப்பா கவுதம் அகியோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.
இதில் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, டி20 தொடரை 1-2 என்ற கணக்கில் இலங்கையிடன் தோல்வியைத் தழுவியது.
Trending
முன்னதாக டி20 தொடரின் போது இந்திய அணி ஆல்ரவுண்டர் குர்னால் பாண்டியாவிற்கு கரோனா தொற்று ஏற்பட்டத்தால், அவருடன் தொடர்பிலிருந்து 8 வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்ட காரணத்தால் இந்திய அணி டி20 தொடரை இழந்தது.
இந்நிலையில், இத்தொடரில் இடம்பெற்று தனிமைப்படுத்தப்பட்டிருந்த யுஸ்வேந்திர சஹால், கிருஷ்ணப்பா கவுதம் ஆகியோருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
இலங்கை தொடரின் போது இந்திய அணி வீரர்கள் அடுத்தடுத்து கரோனா தொற்றால் பாதிக்கப்படுவது சக வீரர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now