
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சுவாரஸ்ய கட்டத்தை எட்டியுள்ளது. வரும் நவம்பர் மாதம் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான வீரர்களை தேர்வு செய்ய வெஸ்ட் இண்டீஸ் தொடர் முக்கிய பங்காக உள்ளது.
இந்திய அணியின் பேட்டிங் வரிசை ஓரளவிற்கு கணிக்கப்பட்ட போதும், பவுலிங் படை தான் இன்னும் உறுதி செய்யப்படாமல் உள்ளது. இதற்கு காரணம் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென அணிக்குள் சேர்க்கப்பட்டிருப்பது தான். சுமார் 8 மாதங்களுக்கு பின்னர் அவரை ப்ளேயிங் 11இல் கொண்டு வந்திருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுத்துள்ளது.
கடந்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு செல்லாது என உறுதி செய்யப்பட்ட பின்னர் அஸ்வினுக்கு வாய்ப்பு தரப்பட்டது. அதன்பின்னர் நியூசிலாந்து தொடரில் விளையாடிய அவர், 8 மாதங்களாக அணியிலேயே சேர்க்கப்படவில்லை. அணித்தேர்வு நெருங்கி வரும் சூழலில் மீண்டும் சேர்க்கப்பட்டிருக்கிறார்.