
IND-W vs ENG-W: Jhulan Goswami achieves another HISTORIC milestone in Women's World Cup (Image Source: Google)
நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் மகளிர் 50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்திய அணி இன்று தனது 4-வது லீக்கில் இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதலில் விளையாடிய இந்தியா 134 ரன்னில் சுருண்டது. பின்னர் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இந்தியா தோல்வியடைந்தாலும் அனுபவ வேகப்பந்து வீச்சு வீராங்கனை ஜுலான் கோஸ்வாமி ஒருநாள் கிரிக்கெட்டில் 250 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். இங்கிலாந்து தொடக்க வீராங்கனை டேமி பியூமோன்ட் விக்கெட்டை வீழ்த்தி 250-ஐ தொட்டார்.
கோஸ்வாமிக்கு அடுத்தப்படியாக ஆஸ்திரேலியாவின் பிட்ஸ்பாட்ரிக், வெஸ்ட் இண்டீஸின் அனிசா முகமது ஆகியோர் தலா 180 விக்கெட்டுகள் வீழ்த்தி அடுத்த இடத்தில் உள்ளனர்.