Advertisement
Advertisement

மகளிர் ஆசிய கோப்பை 2024: இந்தியா vs பாகிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் குரூப் ஏ சுற்றில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அனிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement
Bharathi Kannan
By Bharathi Kannan July 19, 2024 • 12:35 PM
மகளிர் ஆசிய கோப்பை 2024: இந்தியா vs பாகிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
மகளிர் ஆசிய கோப்பை 2024: இந்தியா vs பாகிஸ்தான் - உத்தேச லெவன் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்! (Image Source: Google)

India Women vs Pakistan Women Dream11 Prediction, Asia Cup 2024: மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று முதல் இலங்கையில் தொடங்கவுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் மகளிர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது தம்புளாவில் நடைபெறவுள்ளது. இரு அணிகளிலும் நட்சத்திர வீராங்கனைகள் இடம்பிடித்திருப்பதாலும், இப்போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருப்பதாலும் நிச்சயம் இப்போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

IN-W vs PK-W: போட்டி தகவல்கள்

Trending


  • மோதும் அணிகள் - இந்திய மகளிர் vs பாகிஸ்தான் மகளிர்
  • இடம் - ரங்கிரி தம்புளா சர்வதேச மைதானம், தம்புளா
  • நேரம் - ஜூலை 19, இரவு 7 மணி (இந்திய நேரப்படி)

IN-W vs PK-W Pitch Report

இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ரங்கிரி தம்புள்ளை சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை இங்கு 6 டி20 போட்டிகள் நடந்துள்ள நிலையில், அதில் 4 முறை முதலில் பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 159 ரன்கள். மேலும் இது பேட்டர்களுக்கு மிகவும் சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. இதனால் டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது அணியின் வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

IN-W vs PK-W T20I Head to Head Record

  • மோதிய போட்டிகள் - 14
  • இந்திய மகளிர் - 11
  • பாகிஸ்தான் மகளிர் - 03

India Women vs Pakistan Women Probable Playing XI

இந்திய மகளிர் உத்தேச லெவன்: ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), சஜீவன் சஜ்னா, தீப்தி சர்மா, பூஜா வஸ்த்ரகர், ராதா யாதவ், ரேணுகா சிங், ஸ்ரேயங்கா பாட்டீல்.

பாகிஸ்தான் மகளிர் உத்தேச லெவன்: கால் ஃபிரோஷா, சித்ரா அமீன், சதாப் ஷம்ஸ், முனிபா அலி, நிதா தார் (கே), அலியா ரியாத், உமைமா சோஹைல், ஃபாதிம் சனா, டயானா பைக், நஷ்ரா சந்து, சாதியா இக்பால்.

IN-W vs PK-W Dream11 Team

  • விக்கெட் கீப்பர் - முனிபா அலி
  • பேட்ஸ்மேன்கள் - ஸ்மிருதி மந்தனா (கேப்டன்), ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷஃபாலி வர்மா
  • ஆல்-ரவுண்டர்கள் - தீப்தி ஷர்மா, நிதா தார் (துணை கேப்டன்), பூஜா வஸ்த்ரகர், பாத்திமா சனா
  • பந்துவீச்சாளர்கள் - டயானா பெய்க், ராதா யாதவ், ஸ்ரேயங்கா பாட்டீல்.

IN-W vs PK-W Dream11 Prediction, IN-W vs PK-W T20I Dream11 Team, Fantasy  Cricket Tips, IN-W vs PK-W Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report, Injury Update of the match between India Women vs Pakistan Women

Also Read: Akram ‘hopes’ Indian Team Will Travel To Pakistan For 2025 Champions Trophy

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement