
நியூசிலாந்து ஏ அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 நான்கு நாள் ஆட்டங்களிலும் 3 லிஸ்ட் ஏ ஆட்டங்களிலும் விளையாடுகிறது. பெங்களூரில் நடைபெற்ற முதல் இரு அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டங்களும் டிரா ஆனது. 3ஆவது ஆட்டம் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் சௌரப் குமார் முதல் இன்னிங்சில் 4 விக்கெட், 2ஆம் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தி, அசத்தினார். எனினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உம்ரான் மாலிக் ஏமாற்றமளித்தார். இதில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிவடைந்த நிலையில் பெங்களூருவில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் பரபரப்பான திருப்பங்களுடன் நடந்து முடிந்துள்ளது
இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா ஏ அணி நியூசிலாந்து பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.இருப்பினும் சிஎஸ்கே வீரர் ருத்துராஜ் கெய்க்வாட், தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். 127 பந்துகளில் 108 ரன்கள் அடித்துள்ள அவர் 12 பவுண்டரிகளையும் இரண்டு சிக்ஸர்களையும் அடித்தார். ரஜட் பட்டிதார் 30 ரன்களும், உபேந்திரா யாதவ் 76 ரன்களும் எடுக்க இந்திய ஏ அணி 293 ரன்கள் எடுத்தது.