SA A vs IND A: இந்திய வீரர்கள் அபாரம்; தடுமாறும் தென் ஆப்பிரிக்கா!
இந்திய ஏ அணிக்கு எதிரான 2-வது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டத்தில் முதல் நாள் முடிவில் தென்னாப்பிரிக்க ஏ அணி 7 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது.

குஜராத்தைச் சேர்ந்த பிரியங் பஞ்சால் தலைமையிலான இந்திய ஏ அணி தென்ஆப்பிரிக்காவின் ப்ளூம்ஃபோண்டைனில் நடைபெறும் தொடரில் கலந்துகொள்கிறது.
மூன்று அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் டிசம்பர் 9இல் நிறைவுபெறுகிறது. இந்த ஆட்டம் சூப்பர் ஸ்போர்ட் யூடியூப் தளத்தில் நேரலையாக ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் 2ஆவது அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் நேற்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க ஏ அணி, முதல் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியப் பந்துவீச்சாளர்களில் நவ்தீப் சைனி, இஷான் போரெல் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்கள். இந்த ஆட்டத்தில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் பாபா அபரஜித், ஒரு விக்கெட் எடுத்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now