
வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் உலகக் கோப்பை எனும் பெரிய தொடர் நடைபெறுகிறது. இதற்கு தயாராகும் வகையில் ஆசிய அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரான பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் வரும் 30ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
இந்நிலையில், ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்குத்தான் வெற்றி வாய்ப்பு அதிகம் என்கிறார் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ரஷித் லத்தீஃப். இந்திய அணியின் மிடில் ஆர்டர் பலவீனமானது, எனவே பாகிஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்று அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “பாகிஸ்தான் பேட்டர்கள் பவர் ப்ளேயில் கொஞ்சம் ஸ்லோவாக ஆடுகின்றனர். முடிவு ஓவர்களுக்கான பவர் ஹிட்டர்களும் இல்லை. ஆனால், பவர் ப்ளே பந்து வீச்சில் நாம் அபாரமாக திகழ்கிறோம். பாகிஸ்தான் பவுலிங்கில் பிரச்சினை என்னவென்றால் 11ஆவது ஓவர் முதல் 40ஆவது ஓவர் வரை விக்கெட் எடுக்க ஆளில்லை. ஷதாப் கான் ஆகட்டும், மொகமத் நவாஸ் ஆகட்டும் விக்கெட் எடுக்க பாடுபடுகின்றனர்.