
India batter VR Vanitha announces retirement from all forms of cricket (Image Source: Google)
இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை விஆர் வனிதா. இவர் இந்திய அணிக்காக கடந்த 2014ஆம் ஆண்டு அறிமுகமாகி 6 ஒருநாள், 16 டி20 போட்டிகளில் விளையாடினார்.
தற்போது 31 வயதாகும் வனிதா, இன்று அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “19 ஆண்டுகளுக்கு முன்பு, நான் கிரிக்கெட் விளையாடத் தொடங்கியபோது, விளையாட்டை விரும்பும் சிறுமியாக இருந்தேன். இன்றும் கிரிக்கெட் மீதான என் காதல் அப்படியே இருக்கிறது. மாறுவது திசைதான். விளையாடுவதைத் தொடருங்கள் என்று என் இதயம் சொல்கிறது, ஆனால் என் உடல் சொல்வதை நிறுத்து என்று சொல்கிறது, நான் அதைக் கேட்க முடிவு செய்தேன். என் காலணிகளைத் தொங்கவிட நேரம் கனிந்துவிட்டது.