
India Bowl Out Zimbabwe For 161 In 2nd ODI; Thakur Shines With 3 Wickets (Image Source: Google)
ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று ஹராரேவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மேலும் இன்றைய போட்டிகான இந்திய அணியில் தீபக் சஹாருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் சேர்க்கப்பட்டார்.
அதன்படி களமிறங்கிய ஜிம்பாப்வே அணியின் தொடக்க வீரர்கள் கைடானோ 7 ரன்களிலும், கையா 16 ரன்களிலும், மதவெரே, கேப்டன் சகாப்வா ஆகியோர் தலா 2 ரன்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.