Advertisement
Advertisement
Advertisement

டி20 கிரிக்கெட்: இந்தியா vs இங்கிலாந்து வெல்வது யார்?

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

Advertisement
Cricket Image for டி20 கிரிக்கெட்: இந்தியா vs இங்கிலாந்து வெல்வது யார்?
Cricket Image for டி20 கிரிக்கெட்: இந்தியா vs இங்கிலாந்து வெல்வது யார்? (India vs England Image Source: AFP)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 12, 2021 • 04:29 PM

இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டியானது இன்று இரவு 7 மணிக்கு குஜராத் மாநிலம் அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 12, 2021 • 04:29 PM

இந்திய அணி

Trending

விராட் கோலி தலைமையிலான இந்திய அணியில் அதிரடி வீரர்களான ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர் என பலர் இடம்பெற்றிருப்பது அணிக்கு பெரும் பலத்தை கொடுத்துள்ளது. 

அதேசமயம் ஐபிஎல் தொடரில் அசத்திய சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், ராகுல் திவேத்தியா, அக்சர் பட்டேல் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. 

பந்துவீச்சாளர்களில் ஜஸ்பிரீத் பும்ரா அணியிலிருந்து விலகியிருப்பது அணிக்கு பெரும் பின்னடைவாக இருந்தாலும், காயத்திலிருந்து மீண்டுள்ள புவனேஷ்வர் குமார் அணிக்கு திரும்பியிருப்பது பெரும் சாதகமாகவே அமைந்துள்ளது. 

மேலும், நடராஜன், தீபக் சஹார், நவ்தீப் சைனி என வேகப்பந்துவீச்சாளர்களுடன், ராகுல் சஹார், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால் ஆகியோரும் இடம்பிடித்திருப்பது அணிக்கு பெரும் பலத்தை கொடுத்துள்ளது. இதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளனர். 

இங்கிலாந்து அணி

ஈயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி, தற்போதைய ஐசிசி டி20 தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. மேலும், ஜோஸ் பட்லர், ஜேசன் ராய், டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி என சகட்டுமேனிக்கு அதிரடி வீரர்களை தங்கள் பக்கம் வைத்துள்ளது. 

அதேசமயம் பந்துவீச்சாளர்களில் சாம் கரன், டாம் கரன், மார்க் வுட், ஜோஃப்ரா ஆர்ச்சர் என டி20 ஸ்பெஷலிஸ்டுகளையும் கொண்டுள்ளதால், அவ்வளவு எளிதில் இங்கிலாந்து அணி தோல்வியை சந்தித்து விடாது என்பது ரசிகர்களின் கருத்து. 

முன்னதாக கரோனா ஊரடங்கிற்கு பிறகு ஐயர்லாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா என இங்கிலாந்து அணி விளையாடிய அனைத்து டி20 தொடர்களையும் வென்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளும் சம பலத்துடன் மோத இருப்பதால், இன்றைய போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

மைதனாம்: 

இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்து டி20 போட்டிகளுமே நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இது ஒரு விதத்தில் அணிகளுக்கும் சாதகமாக இருப்பினும், கடைசியாக இந்த மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகள் இரு அணிக்கும் சற்று தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. 

ஏனெனில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மைதானத்தில் சர்வதேச போட்டிகள் நடத்தப்படுகிறது. அதிலும், இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளும் மூன்று நாள்களிலேயே முடிந்தது மைதானத்தின் தன்மை குறித்த பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. 

இதற்கிடையில், இன்று முதலாவது டி20 போட்டி நடைபெறவுள்ளதால் இப்போட்டியில் மைதானத்தின் பங்களிப்பும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றன. 

இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த், இஷான் கிஷன், யுஸ்வேந்திர சாஹல், ஆக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ராகுல் தேவதியா, நடராஜன், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ராகுல் சஹார், நவ்தீப் சைனி, ஷார்துல் தாக்கூர்.

இங்கிலாந்து அணி: ஈயான் மோர்கன், ஜோஸ் பட்லர், ஜேசன் ராய், டேவிட் மாலன், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, சாம் கரன், டாம் கரன், ஜோஃப்ரா ஆர்ச்சர், அதில் ரஷித், சாம் பில்லிங்ஸ், டாப்லே, மார்க் வுட், கிறிஸ் ஜோர்டன், லியாம் லிவிங்ஸ்டோன். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement