
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்று வந்த 3 போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பை டெஸ்ட் தொடரில் இந்தியா 2 – 1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது. முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியில் தோல்வி பெற்ற போதிலும் கடைசி 2 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அபாரமாக வெற்றி பெற்று இந்தியாவிற்கு பதிலடி கொடுத்து கோப்பையை வென்றது.
இந்த போட்டியில் 3ஆவது நாளில் இந்தியா நிர்ணயித்த 212 ரன்கள் இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு அந்த அணி கேப்டன் டீன் எல்கர் மீண்டும் நிதானத்துடன் பேட்டிங் செய்து வந்தார். அப்போது அபாரமாக பந்து வீசிய ரவிச்சந்திரன் அஸ்வின் அவரை எல்பிடபிள்யூ முறையில் அவுட் செய்தார்.
ஆனால் அதை எல்கர் ரெவியூ செய்ய அந்த பந்து ஸ்டம்புக்கு மேலே சென்றதால் நாட் அவுட் – கொடுக்கப்பட்டது. இருப்பினும் களத்தில் இருந்த தென் ஆப்பிரிக்க அம்பயர் “மரஸ் எரஸ்மஸ்” இது நடப்பதற்கு சாத்தியமே இல்லை என கூறியது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது.