
டி20 உலகக் கோப்பை 2022 தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.டி20 உலகக் கோப்பை 2022 தொடர் சூப்பர் 12 சுற்றின் லீக் ஆட்டத்தில் இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே தனியொருவனாக நின்று 40 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்ஸர் உட்பட 68 ரன்களை குவித்து அசத்தினார். மற்றவர்களில் யாரும் 20 ரன்களை கூட தொடவில்லை. குறிப்பாக ரோஹித் ஷர்மா 15 (14), கோலி 12 (11) இருவரை தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன்களை மட்டுமே அடித்தனர். இதனால், இந்திய அணி 20 ஓவர்களில் 133/9 ரன்களை மட்டுமே சேர்த்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் லுங்கி இங்கிடி 4 விக்கெட்டுகளையும், வெய்ன் பார்னெல் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இலக்கை துரத்திக் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க வீரர்கள் டி காக் 1 (3), ரூஸோவ் 0 (2) ஆகியோரை அர்ஷ்தீப் சிங் அடுத்தடுத்து வெளியேற்று கெத்து காட்டினார். தொடர்ந்து பவுமாவும் 10 (15) பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து எய்டன் மார்க்கரம், மில்லர் இருவரும் பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.