Advertisement

இந்த 5 பேர் போதும்; கப் நமக்குத்தான் - ஆஷிஷ் நெஹ்ரா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்த ஐந்து வீரர்கள் இடம்பெற்றால் நிச்சயம் கோப்பை இந்திய அணிக்கு தான் என முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan May 23, 2021 • 21:23 PM
India Pacers Will Have The Edge in WTC Final Against New Zealand: Ashish Nehra
India Pacers Will Have The Edge in WTC Final Against New Zealand: Ashish Nehra (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் கரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடரைத் தொடர்ந்து, தற்போது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்புகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பக்கம் திரும்பியுள்ளது. 

இதற்கு காரணம் வருகிற ஜூன் 18ஆம் தேதி நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் மோதவுள்ளது.

Trending


இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியில் 20 வீரர்கள் மற்றும் நான்கு துணை வீரர்கள் என 24 பேர் கொண்ட பெரிய குழு ஜூன் 2ஆம் தேதி இங்கிலாந்து செல்ல உள்ளது. இந்த போட்டியில் யார் ? யார் ? விளையாடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

மேலும் இந்தப் போட்டி குறித்த கருத்துக்களை முன்னாள் வீரர்கள் பலரும் வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆஷிஷ் நெஹ்ரா கூறுகையில், ஐந்து இந்திய பந்து வீச்சாளர்கள் போதும். இந்திய அணிக்கு தான் கோப்பை என்று தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய நெஹ்ரா, “இரண்டு அணிகளிலுமே சிறந்த பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். இருப்பினும் இந்திய அணியை பொறுத்தவரைக்கும் பும்ரா, ஷமி ஆகியோர் நியூசிலாந்து அணிக்கு சற்று அச்சுறுத்தலாக இருப்பார்கள். அதேபோன்று இஷாந்த் சர்மாவின் அனுபவமும் இந்த போட்டியில் கைகொடுக்கும். இந்த போட்டியில் பும்ரா, ஷமி, இஷாந்த் தவிர அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரையும் சேர்த்து 5 பந்துவீச்சாளராக களமிறங்கவேண்டும்.

ஒருவேளை பிட்ச் பசுமையாக இருந்தால் ஒரு சுழற்பந்து வீச்சாளரைக் குறைத்து விட்டு கூடுதலாக ஒரு வேகப்பந்து வீச்சாளர் உடன் விளையாட வேண்டும் என்றால் சிராஜை அணிக்குள் கொண்டு வரலாம். இப்படி 5 பவுலர்களை வைத்து விளையாடும் போது நிச்சயம் வெற்றி இந்திய அணி வசம் தான்” என்று தெரிவித்துள்ளார். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement