
India player Priya Punia loses mother to Covid-19 (Image Source: Google)
இந்தியாவில் கரோனா பரவல் 2வது அலை தனது கோர முகத்தை காட்டி வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பது போல் உயிரிழப்பவர்களில் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை பிரியா புனியாவின் தாய் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து பிரியா புனியா தனது பதிவில், "நீங்கள் எப்போதும் என்னை ஏன் பலமாக இருக்கச் சொன்னீர்கள் என இன்று நான் உணர்ந்தேன். உங்களுடைய இழப்பைச் சுமக்க ஒரு நாள் எனக்கு வலிமை தேவை என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் உங்களை இழக்கிறேன் அம்மா! நீங்கள் எப்போதும் என்னுடன் இருப்பீர்கள்.