
‘India pulling off what even Australia could not at their peak’ – Inzamam-ul-Haq (Image Source: Google)
இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 2 அணிகள் வெவ்வேறு நாடுகளில் விளையாட உள்ளது. அதன்படி விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், இங்கிலாந்து டெஸ்ட் தொடர் என 6 போட்டிகளில் விளையாடுகிறது.
இந்த நிலையில் அதே சமயத்தில் மற்றொரு இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இத்தொடர் ஜூலை 13 முதல் 27ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
விராட் கோலி, ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இல்லாத இந்திய அணி இலங்கையில் விளையாட உள்ளது. தவான் இந்த அணிக்கு கேப்டனாக இருக்க வாய்ப்பு உள்ளது. ஹர்திக் பாண்டியா, பிரித்வி ஷா உள்ளிட்ட திறமையான வீரர்கள் இலங்கையில் ஆட இருக்கிறார்கள்.