
இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஒருநாள் போட்டி இன்று ஜிம்பாப்வேயில் உள்ள ஹராரே நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாஸில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ராகுல் முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தார்.
அதன்படி முதலில் விளையாடிய ஜிம்பாப்வே அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 189 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் பின்னர் 190 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 30.5 ஓவர்களில் 192 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தொடக்க வீரர்களான ஷிகார் தவான் 81 ரன்களும், சுப்மன் கில் 82 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இறுதிவரை களத்தில் இருந்தனர். இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசி பவர்பிளே ஓவர்களிலேயே மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய தீபக் சாஹர் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.