இந்திய அணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை அணியில் சேர்த்திருக்க வேண்டும் - அமித் மிஸ்ரா!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை சேர்த்திருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நேற்று சவுத்தாம்ப்டன் நகரில் உள்ள ஏஜஸ் பவுல் நடைபெற இருந்தது. ஆனால் நேற்று முழுவதும் அங்கு பெய்த மழையின் காரணமாக முதல் நாள் ஆட்டம் டாஸ் போடப்படாமலேயே முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் இப்போட்டிக்கான பிளேயிங் லெவனை இந்திய அணி முன்கூட்டியே அறிவித்திருந்தது. அதில் 6 பேட்ஸ்மேன்கள், 2 சுழற்பந்து வீச்சாளர்கள், 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் மழை பெய்துள்ளதால் அணியில் மேலும் ஒரு வேகப்பந்து வீச்சாளரை சேர்க்க வேண்டும் என பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Trending
இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை சேர்த்திருக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரர் அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர்,“தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் பிளேயிங் லெவன் சிறப்பாக உள்ளது. அதில் அஸ்வின், ஜடேஜா என இரு சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்கள் இடம்பெற்றிருப்பது அணியின் பேட்டிங் வரிசைக்கு பலம் சேர்த்துள்ளது.
ஆனால் என்னை பொறுத்தவரை இந்திய அணி ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை அணியில் சேர்த்திருக்க வேண்டும். ஏனெனில் அணியின் முன்னணி பந்துவீச்சாளர்கள் சோர்வடையும் போது, அவர் சில ஓவர்களை வீசி எதிரணிக்கு நெருக்கடியை கொடுத்திருப்பார்.
ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி பந்துவீச்சை காட்டிலும் பேட்டிங்கில் வலிமையானதாக உள்ளது. ஏனெனில் இங்கிலாந்து போன்ற மைதாங்களில் சுழற்பந்து வீச்சைக் காட்டிலும், வேகப்பந்து வீச்சு பலனளிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய பிளேயிங் லெவனில் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா ஆகியோருடன் இஷாந்த் சர்மா, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் பந்து வீச்சாளர்களாக இடம்பெற்றுள்ளனர்.
Win Big, Make Your Cricket Tales Now