
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி மழை காரணமாக கடைசி நாளில் போட்டி நடைபெறாமல் போனதால் இந்திய அணி எளிதில் வெற்றி பெற வேண்டிய வாய்ப்பை தவற விட்டது. அதற்கு அடுத்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்நிலையில், இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி பெற்ற வெற்றிக்கு பின்னர் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் இங்கிலாந்து அணியை விமர்சனம் செய்யும் வகையில் சற்று சுவாரஸ்யமான ஒரு பேட்டியை அளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர், “இங்கிலாந்து அணியின் தூக்க வீரர்களின் டெக்னிக் மிகவும் வேடிக்கையாக இருந்தது. துவக்க வீரர் ஆட்டம் இழந்ததும் உள்ளே வந்த மூன்றாவது வீரரான ஹசிப் ஹமீத் தான் ஆட்டம் இழந்து விடுவோமோ என்ற பயத்தில் பதட்டமாகவே இருந்தார்.