Advertisement

SA vs IND, 2nd Test: நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தும் தென் ஆப்பிரிக்கா!

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்களை எடுத்துள்ளது.

Advertisement
India-South Africa Share Honors On Day 1, Score 35/1
India-South Africa Share Honors On Day 1, Score 35/1 (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 03, 2022 • 10:14 PM

தென் ஆப்பிரிக்கா -  இந்தியா இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி ஜோஹன்னஸ்பர்க்கில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் காயம் காரணமாக கோலி விளையாடாததால் கேஎல் ராகுல்  இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 03, 2022 • 10:14 PM

அதன்படி களமிறங்கிய் இந்திய அணியில் தொடக்க வீரர் மயன்க் அகர்வால் 26 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின்னர் சீனியர் வீரர்களான புஜாரா (3) மற்றும் ரஹானே (0) ஆகிய இருவருமே சொதப்பினர். அதன்பின்னர் 4ஆவது விக்கெட்டுக்கு ராகுலுடன் ஜோடி சேர்ந்த ஹனுமா விஹாரி சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்தார். ஆனால் கிடைத்த தொடக்கத்தை பெரிய இன்னிங்ஸாக மாற்றத்தவறி 20 ரன்களுக்கு விஹாரி ஆட்டமிழந்தார்.

Trending

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து ஆடிய கேஎல் ராகுல் அரைசதம் அடித்தார். ஆனால் அதன்பின்னர் பெரிய இன்னிங்ஸ் ஆடாமல் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.  ரிஷப் பந்த் நிதானமாக ஆட, அஸ்வின் அதிரடியாக விளையாடினார். 

பின்னர் ரிஷப் பந்த் 17 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஷர்துல் தாகூர் ரன்னே அடிக்காமல் டக் அவுட்டானார். முகமது ஷமி 9 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய அஸ்வின் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்து அரைசதத்தை தவறவிட்டார். ஜஸ்ப்ரித் பும்ரா 11 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 14 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, 202 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்திய அணி.

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணியில் ஐடன் மார்க்ரம் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முகமது ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

அதன்பின் ஜோடி சேர்ந்த கேப்டன் டீன் எல்கர் - கீகன் பெட்டர்சன் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்து விக்கெட் இழப்பை தடுத்தது. 

இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 35 ரன்களைச் சேர்த்துள்ளது. அந்த அணியின் கேப்டன் எல்கர் 11 ரன்களுடனும், பெட்டர்சன் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி தரப்பில் ஷமி ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார். 

இதன்மூலம் 167 ரன்கள் பின் தங்கிய நிலையில் தென் ஆப்பிரிக்க அணி நாளை இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கவுள்ளது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement